Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

விமல் வீரவன்ச மற்றும் 35 பேர் அடங்கிய குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனுமதியின்றி நுழைந்த விமல் வீரவன்சவின் குழுவினரை நினைவுத் தூபி வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியது பொலிஸ்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவருடன் வந்த சுமார் 35 பேர் அடங்கிய குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பத்தரமுல்லையிலுள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் நேற்று (18) இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.தேசிய ரணவிரு தின (National War Heroes Day) நினைவேந்தல் நிகழ்விற்கான ஒத்திகையின் போது ஏற்பட்ட இடையூறுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (மே 19) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நாடாளுமன்ற மைதானத்திற்கு அருகிலுள்ள ரணவிரு நினைவுத் தூபியில் தேசிய ரணவிரு தின நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாட்டு ஒத்திகைகள் நேற்று பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன.இதன்போது, உரிய அனுமதியின்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் நினைவுத் தூபி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுமதியின்றி நுழைந்த இக்குழுவினரின் செயற்பாடுகள் காரணமாக, அங்கு பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்குப் பெரும் தடை ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.இதனை அடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் விமல் வீரவன்சவின் குழுவினரை நினைவுத் தூபி வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஒத்திகை நடவடிக்கைகளைத் தடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விமல் வீரவன்ச மற்றும் அவருடன் இருந்த குழுவினருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.