Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

யாழில் 56.6 % வாக்குகளும் மன்னாாில் 70.15% வாக்குகளும் பதிவு!

மன்னர் மாவட்டத்தில் 88 உறுப்பினர்களை தெரிவு செய்ய 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, மாலை 04 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது. அதன் போது, 56.6 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினருக்கு 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிட்டனர்.

மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில், 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில்   எவ்வித வன்முறைகளும் இன்றி மன்னார் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் இடம் பெற்றிருப்பதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார் மாவட்ட செயலகத்தில் இன்று (6) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,,

மன்னர் மாவட்டத்தில் 88 உறுப்பினர்களை தெரிவு செய்ய 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.இந்த நிலையில் இன்று (6)மாலை வரை 64 ஆயிரத்து 904 வாக்காளர்கள் வாக்களித்திருக்கின்றனர்.அதன் அடிப்படையில் மாவட்டத்தின் முழுமையான வாக்குப்பதிவு 70.15%  காணப்படுகின்றது.
மன்னார் நகர சபைக்கு 10,975 வாக்குகளும் ,மன்னார் பிரதேச சபைக்கு 16,939 வாக்குகளும், நானாட்டான்  பிரதேச சபைக்கு 12,343 வாக்குகளும், முசலி பிரதேச சபைக்கு 10,819 வாக்குகளும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 13,636 வாக்களும் அளிக்கப்பட்டுள்ளது.
 மாலை 4:30 மணி அளவில் அனைத்து வாக்களிப்பு வாக்குகளும் மன்னார்  மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47 வாக்கு என்னும் நிலையங்களில் வாக்குகள் என்னும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
வட்டார ரீதியில் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து தேர்தல் வாக்களிப்பு விபரங்கள் அறிவிக்கப்படும். முழுமையான  வாக்களிப்பு முடிவுகள் மாவட்ட செயலும் ஊடாக அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.