Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வீட்டு திட்டங்களுக்காக யாழுக்கு 891.30 மில்லியன் ரூபா நிதி!

வீடமைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

யாழ் மாவட்டத்தில் வீட்டு திட்டங்களுக்காக 891.30 மில்லியன் ரூபா நிதி  கிடைக்கவுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 235 மில்லியன் நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வீடமைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்   யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில்  கிராமிய அபிவிருத்தித் திட்டம், வீதி அபிவிருத்தி  திட்டம்,   வீட்டுத் திட்டம், குடிநீர், போன்ற திட்டங்களின் முன்னேற்றம்  தொடர்பாக   ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும், சனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை க் கூட்டத்தில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 9 இலட்சம் ரூபாவாகவும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 15 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட செயலர் , தற்போது 9இலட்சம் பெறுமதியான 53 வீடுகளுக்கும், 15இலட்சம் பெறுமதியான 563 வீடுகளுக்குமான நிதியுமாக மொத்தமாக மாவட்டத்திற்கு 891.30 மில்லியன் ரூபா நிதி  கிடைக்கவுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 235 மில்லியன் நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வீட்டுத் திட்ட வேலைகளை துரிதப்படுத்துமாறும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், மாவட்ட  திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக  திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.