Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமது பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை - வைத்தியர் பிரபாத் சுகததாச.

தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அச்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமது பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டார். 

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (17) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

குறித்த கலந்துரையாடலின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். 

இதேவேளை, பாராளுமன்ற வளாகத்தில் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.