Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பசறை நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிலையங்களிலும் விசேட பரிசோதனைகள்!

20க்கும் மேற்பட்ட விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பசறை பிரதேச பொதுச் சுகாதார தலைமை.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பசறை நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து விற்பனை நிலையங்களிலும் விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்த பரிசோதனைகளை பசறை, பதுளை மற்றும் லுணுகலை பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து முன்னெடுத்தனர்.

இதன்போது சுகாதார விதிமுறைகளுக்கு முரணாக விற்பனை செய்யப்பட்ட காலாவதியான உணவுப் பொருட்கள், பாவனைக்கு தகுதியற்ற மற்றும் சேதமடைந்த உணவுப் பொதிகள் உள்ளிட்டவை இனங்காணப்பட்டு, அவை பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன.  மேலும், சுமார் 20க்கும் மேற்பட்ட விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பசறை பிரதேச பொதுச் சுகாதார தலைமை பரிசோதகர் எம்.ஹெச்.எம். நலிம் தெரிவித்தார்.  தற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 மற்றும் 24 ஆம் திகதிகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்படவுள்ளனர்.