Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தலைக்கவசம் அணிந்து நடமாடுபவர்களுக்கு சோதனை நடவடிக்கை- பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

,

முகத்தை முழுமையாக மறைக்கும் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் கண்காணித்து சோதனை நடாத்தப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தமது தலை மற்றும் முகங்களை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் பயணிப்பவர்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே என்பதை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே தனிநபர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது தேவையில்லாமல் தலைக்கவசம் அணிந்திருப்பதைக் கண்டால் அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்படுவது போல் தோன்றினால் அந்த நபரையும் அவரது உடமைகளையும் சோதனை செய்யுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும், பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.