Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தலதா யாத்திரை பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக 50 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்!

கண்டி நகரை சுத்தமாகவும் அலங்காரமாகவும் வைத்திருப்பதற்காக பொதுச் சுகாதாரப் பரிசோதர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு!

ஸ்ரீ தலதா யாத்திரை பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக 50 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் செயற்பாட்டிற்கு இணங்க கண்டி மாநகர சபையின் பிரதான நகர சுகாதார வைத்திய அதிகாரிகளின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த சகல செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
நகரின் சகல உணவு தயாரிப்பு நிலையங்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனை செய்யப்படுவதுடன் அதன்படி உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.இக்காலப் பகுதியில் இடம்பெறும் சகல விதமான அன்னதானங்களும் கண்டி மாநகர சபையின் சுகாதாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், அந்த சகல அன்னதானங்கள் மற்றும் வீதி உணவு வழங்கும் இடங்கள் தொடர்ந்தும் பொதுச்சுகாதாரப் பரிசோதர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

கண்டி நகரை சுத்தமாகவும் அலங்காரமாகவும் வைத்திருப்பதற்காக பொதுச் சுகாதாரப் பரிசோதர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ், முறையாகக் கழிவுகளை அகற்றும் செயற்பாடு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பதற்காக, கழிவுகளை உரிய இடங்களில் இடுமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதர்களின் சங்கம் பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பக்தர்களின் சுகாதார நடவடிக்கைகளுக்காக 150 நடமாடும் மலசல கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் கழிவுகளை அகற்றும் செயற்பாடு நகரக் கழிவு நீர் அகற்றும் திட்டம் ஊடாக மேற்கொள்ளப்படும்.

பக்தர்களின் குடிநீர் அவசியத்திற்காக முறையான நீர் விநியோகம் 24மணி நேரமும் செயற்படுத்தப்படுவதுடன், அந்த நீரின் பாதுகாப்பு ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பரிசோதனை செய்யப்படும்.
பாதுகாப்பு பிரிவின் அங்கத்தவர்களின் தங்குமிடம் அமைந்துள்ள இடங்களில் சுகாதார செயற்பாடுகள், உணவு விநியோகம், தொற்று நோய்த் தடுப்பு போன்றவை குறித்த தொடர்ச்சியான கண்காணிப்பிற்காகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தலைமையில் சுகாதாரக் குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது