சிகை அலங்கரிப்பாளர்கள் மக்களின் நலன்கருதி சேவை வழங்க முயற்சிக்க வேண்டும் - அகில இலங்கை மக்கள் கட்சி.
ஊதியம் அவசியம் தான். ஆனால் அதை நியாயமான வகையில் கோர வேண்டும். ஓவ்வொரு வைத்தியரும் தனியார் வைத்தியசாலைகளில் பல இலட்சங்களை மாதாந்தம் உழைக்கின்றார்கள்.
சிகை அலங்கரிப்பாளர்கள் மக்களின் நலன்கருதி சேவை வழங்க முயற்சிக்க வேண்டும் - அகில இலங்கை மக்கள் கட்சி வலியுறுத்து.
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அப்பதவியை தனது ஆயுள் காலம்வரை தக்கவைக்க முயன்றுகொண்டிருப்பதால் குறித்த வைத்தியசாலையில் தகுதி பெற்றும் பல வைத்தியர்கள் அப்பதவி நிலைக்கு எட்டமுடியாது பரிதாபமாக ஓய்வுபெற்றுவருகின்றனர் என சுட்டிக்காட்டிய அகில இலங்கை மக்கள் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் இவ்வாறான சுயநலவாதிகளால்தான்; வைத்தியத்துறையில் பாரிய குழறுபடிகளும் மோசடிகளும் உருவாகி வருவதாகவும்; தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் இவ்விடையம் குறித்து மேலும் கூறுகையில் -
அண்மைய சில நாள்களாக வைத்தியத்துறையினர் தமது தனிப்பட்ட தேவைகளை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது அவர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் பாரிய துரோகமாகவே இருக்கின்றது.
மக்களின் வரிப்பணத்தில்தான் இவர்கள் இந்த தகுதிநிலையை எட்டுவதற்காக பயின்றார்கள். அரசும் பல்கலைக் கழங்கங்கள் ஊடாக அனைத்தையும் இலவசமாக வழங்கி வைத்தியர் என்ற தகுதிநிலையை அவர்களுக்கு கொடுத்திருக்கின்றது.
இந்த சலுகைகளை எல்லாம் பெற்ற இந்த வைத்தியர்கள் இன்று போராட்டம் என்ற போர்வையில் மக்களை திண்டாட வைக்கின்றனர்.
ஊதியம் அவசியம் தான். ஆனால் அதை நியாயமான வகையில் கோர வேண்டும். ஓவ்வொரு வைத்தியரும் தனியார் வைத்தியசாலைகளில் பல இலட்சங்களை மாதாந்தம் உழைக்கின்றார்கள். இதேநேரம் ஒரு சில மணி நேரங்களே அரச வைத்தியசாலைகளில் சேவையை முன்னெடுத்து வரும் இவர்கள் எதற்காக ஊதிய அதிகரிப்பு குறித்து போராட வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.
மறுபுறம் தனியார் மயமாக்கலை நோக்கி அரச வைத்தியக் கட்டமைப்பும் நகர்த்திச் செல்லப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் தனியார் வைத்தியசாலைகள் கோலோச்சும் நிலை காணப்படுகின்றது. இதேநேரம் வைத்தியர்களும் ஒரு மாபியா கட்டமைப்பாக உருவெடுத்துள்ளது. இவை அனைத்துர்ம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிரானதாகவே இருக்கின்றது. வைத்திய துறையினர் இவ்வாறு தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தால் மக்களை ஒன்றிணைத்து நாம் வீதிக்கிறங்க வேண்டிய நிலையே உருவாகும் என்றும் தெரிவித்தார்.இதேநேராம் வடக்கு மக்களை துன்பத்துக்குள்ளாக்கும் மற்றொரு துறையாக சிகை அலங்கரிப்பு துறை காணப்படுகின்றது.
இவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தமது சேவை நிலையங்களை மூடுகின்றார்கள். ஆனால் வாடிக்கையாளர்களின் தேவை நாளாக ஞாயிற்றுக்கிழமையே இருக்கின்றது. ஏனெனில் அரச ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் என பல இலட்சம் பேருக்கு ஞாயிற்றுக்கிழமையே விடுமுறையான நாளாக இருக்கின்றது. அதை உணர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் சேவையை முன்னெடுக்க குறித்த தரப்பினர் முயற்சிக்க வேண்டும்.
இதேநேரம் சிகை அலங்கரிப்பு நிலையங்களில் சேவைக்கான கூலி அதாவது தலைமுடி வெட்டும் கூலியோ ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுகின்றது. இதை சங்கம் என்ற போர்வையில் முன்னெடுக்கின்றனர். ஆனால் நாட்டில் சாதாரண ஒரு கூலி வேலை செய்பவருக்கு நாள் முழுவதுக்குமான கூலியாக 3500 ரூபாவரைதான் கிடைக்கின்றது. ஆனால் இந்த சேவையை செய்யும் தரப்பினருக்கு ஒருவருக்கான சேவைக்கே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் அறவிடப்படுகின்றது. எனவே சிகை அலங்கரிப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்களின் பணத்தை அபகரிக்காது நியாயமான வகையில் சேவைக்கான பணத்தை அறவிட்டு மக்களுக்கு அசௌகரியங்களை இல்லாத சேவையாற்ற முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


