Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பலதும் பத்தும்:- 30,04,2025 - யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இரத்ததான நிகழ்வு.

வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் கூடுகள் கையளிக்கும் நிகழ்வு!

 நைஜீரியா கண்ணிவெடி தாக்குதலில் பஸ் வெடித்து சிதறியது!

மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்றபயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.  அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும்செயலில் ஈடுபடும் 'பண்டிட்ஸ்' என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்டிட்ஸ் கடத்தல்கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்புபடையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் போர்னோ மாகாணம் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று பஸ் ஒன்றுசென்றுகொண்டிருந்தது. அதில் 29 பேர் பயணித்தனர். ரனா என்ற பகுதியில் சென்றபோது சாலையோரம்வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் பஸ் சிக்கியது. இந்த கண்ணிவெடி தாக்குதலில் பஸ் வெடித்து சிதறியது. 

இந்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த 26 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கமரூன் நாட்டின் எல்லையோர மாகாணத்தில் நடந்த இந்த தாக்குதலை போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திஇருக்கலாம் என்று பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சுகாதார சீர்கேடு. பேக்கரி உரிமையாளரிற்கு 20,000 ரூபாய் தண்டம்...!

கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மலையாளபுரத்தில் கடந்த 24.04.2025 பொது சுகாதாரபரிசோதகர் ஆ. டனாத் தலைமையிலான குழுவினரால் உணவு கையாளும் நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பேக்கரி இனங்காணப்பட்டது. குறித்த பேக்கரியில் திகதிகாலாவதியான பொருட்கள் மற்றும் காலாவதியான பொருள்களுக்கு மீள்திகதி இடல் போன்ற குறைபாடுகள் உட்படபல குறைபாடுகள் இனங்காணப்பட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் ஆ. டனாத் இனால் பேக்கரி உரிமையாளரிற்கு எதிராக இன்றையதினம்29.04.2025 கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை இன்றையதினமேவிசாரணைக்கு எடுத்துகொண்ட நீதவான் பேக்கரி உரிமையளரை குற்றவாளியாக இனங்கண்டு 20,000/= தண்டம்விதித்ததோடு கடுமையான எச்சரிக்கையும் வழங்கினார். 

திகதி காலாவதியான பொருட்கள். 40,000/= தண்டம்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் அவர்களின்வழிகாட்டலிலும், ஆலோசனையிலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் உணவு கையாளும் நிலையங்கள், பூட்சிற்றிகள், பலசரக்கு வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.  அந்தவகையில் கடந்த 16.04.2025ம் திகதி கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் கந்தையா ஜெகானந்தன்தலைமையிலான குழுவினரால் பூட்சிற்றிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  இதன்போது பூட்சிற்றி ஒன்றில் வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள்விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மேற்படி பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் கந்தையா ஜெகானந்தன், இன்றையதினம்( 29) யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பூட்சிற்றி முகாமையாளரிற்கு எதிராக வழக்கு தாக்கல்செய்தார். வழக்கினை இன்றே விசாரணைக்கு எடுத்து கொண்ட மேலதிக நீதவான் எஸ். லெனின்குமார், பூட்சிற்றிமுகாமையாளரை குற்றவாளியாக இனங்கண்டு 40,000/= தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும்வழங்கினார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இரத்ததான நிகழ்வு.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் "உதிரம் கொடுப்போம்உயிர்களை காப்போம்" எனும் தொனிப் பொருளிலான இரத்ததான நிகழ்வானது நலன்புரிச் சங்க தலைவரும் உதவிமாவட்டச் செயலாளருமான செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் பங்குபற்றுதலுடனும் இன்றைய தினம் (29) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் இரத்ததான ஆரம்ப நிகழ்வில்  அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய கலாநிதி P. கண்ணன், பொதுச் சுகாதார பரிசோதகர் திரு. த.ரவீனதாஸ், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தாதியஉத்தியோகத்தர்கள்  பங்குபற்றியிருந்தார்கள். மேலும், இரத்ததான நிகழ்வில் 25 மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் குருதிக் கொடை வழங்கியிருந்தமைகுறிப்பிடத்தக்கது. 

வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் கூடுகள் கையளிக்கும் நிகழ்வு! 

வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களால் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக , வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களைஇடும் 18 கூடுகள் யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர்  திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம்   நேற்றைய தினம்(28) மு. ப 09.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் வைத்து  Save a Life நிறுனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்திரு. க. இராகுலன் அவர்களால் கையளிக்கப்பட்டது. 

மாவட்டச் செயலகம் அதனை அண்டிய பகுதியில் வைப்பதற்காக 03 கூடுகளும், மாவட்டத்திலுள்ள ஒவ்வொருபிரதேச செயலகங்களிலும் தலா ஒன்று வீதம் வைப்பதற்காக 15 கூடுகளுமாக 18 கூடுகள்கையளிக்கப்பட்டுள்ளதுடன், வெற்றுப் போத்தல்களால் கூடு நிரம்பியவுடன் அதனை குறித்த நிறுவனம் மீளசுழற்சிக்காக எடுத்துச் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் கையளிப்பு நிகழ்வில் பிரதம பொறியியலாளர் திரு. க. திருக்குமார் , உதவி மாவட்டச் செயலாளர் செல்விஉ.தா்சினி, Save a Life நிறுவன தொழில் நுட்ப முகாமையாளர் திரு. ம. கீதானந்தன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

மட்டக்களப்பு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிபத்திரம் வழங்க ஆறாயிரம் ரூபா இலஞ்சம்!

மட்டக்களப்பு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிபத்திரம் வழங்க ஆறாயிரம் ரூபா இலஞ்சமாகவாங்கிய பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை  இன்று மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர்சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை  கரடியனாறு சுகாதாரபிரிவில் கடமையாற்றிவரும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் கோரியபோது அவர் இலஞ்சமாக ஆறாயிரம்ரூபாவை கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த கடடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம்முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில்கரடியனாறு பகுதியிலுள்ள  வீதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த பொதுச் சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக ஆறாயிரம் ரூபாவை வாங்கிய நிலையில் அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து  பொதுச் சுகாதார பரிசோதகரை  கைது செய்தனர்.  கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைஎடுத்துவருவதாகவும்  இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 

யாழில் இளம் குடும்பப் பெண் தனக்குத் தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவுப் பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம்குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றைய தினம் குளிப்பதற்கு என்று சென்றுள்ளார். பின்னர் அங்கு தனக்குத் தானே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளார். மன விரக்தி காரணமாக இந்தச் சம்பவம்இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 33 வேட்பாளர்கள், 349 கட்சி ஆதரவாளர்கள் கைது!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக மொத்தம் 33 வேட்பாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (30) காலை வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகஇது தொடர்பில் விடுத்த அறிக்கையில் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் 349 கட்சி ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று வரை தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மேலும், மேற்கண்ட காலகட்டத்தில் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதேநேரம், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக பயன்படுத்தப்பட்ட 32 வாகனங்களும்பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.