Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சிறுவர் பாதுகாப்பு வாரம் - சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வு நடைபவனி!

சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி முல்லைத்தீவில் விழிப்புணர்வு நடைபவனி!

முல்லைத்தீவு முத்தையன்கட்டு -  ஜீவநகர் கிராமத்தில் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக  வெள்ளிக்கிழமை (22) சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது. 

சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு "நாம் சிறுவர் எம்மை காப்பீர்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா ஆரம்பித்து வைத்திருந்தார்.

முத்தையன்கட்டு ஜீவநகர்  பொதுநோக்கு மண்டபத்திற்கு முன்பாக  ஆரம்பித்த குறித்த பேரணியானது நடைபவனியாக சென்று ஜீவநகர் சமாதான சுவிஷேச தேவாலயத்தில் நிறைவு பெற்றிருந்தது. 

ஜெபஆலயமிஷன் திருச்சபையின் கீழ் இயங்கும் பெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றிருந்தது. 

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கொடு, சிறுவர்களை பாதுகாப்போம் , சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மன்னிப்பு இல்லை, குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் நமது நிகழ்காலத்தை தியாகம் செய்வோம், அமர்த்தாதே அமர்த்தாதே சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களுக்கான சிறுவர் நேயமுள்ளதும் பாதுகாப்பு மிக்கதுமான சூழலொன்றை கட்டியெழுப்புவோம், வன்முறைகளில் இருந்து சிறுவர்களை நாம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு பதாதைகள் தாங்கிய விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி இடம்பெற்றிருந்தது.  

குறித்த பேரணியில் முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா, வெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் இயக்குனர் காலேப் மற்றும் உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

1000495440.jpg

1000495456.jpg

1000495444.jpg

1000495443.jpg