Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழக படகோட்டிகளுக்கு 06 மாத சிறை!

அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் படகோட்டிகள்

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்திய, தமிழக படகோட்டிகள் இருவருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று  06 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன் , இருவருக்கும் தலா 4 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.

 
கடந்த மாதம் 20ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் படகோட்டிகள் இருவர் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
 
குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , படகோட்டிகள் இருவருக்கும் தலா 06 மாத சிறைத்தண்டனையும் , தலா 4 மில்லியன் ரூபாய் தண்டபணமும் விதித்த மன்று , தண்ட பணம் செலுத்த தவறின் , 03 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று உத்தரவிட்டது.
 
இரண்டு படகுகளில் இருந்த நான்கு கடற்தொழிலாளிகளையும் கடுமையாக எச்சரித்த மன்று , இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து, அதனை 06 வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளது