Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது!

கட்டுகித்துல, ரம்பொடை நீர்வீழ்ச்சி மற்றும் தவலந்தென்ன ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், அவ்விடங்களில் வீதி தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.

கொத்மலை  நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். 
இதேவேளை, மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான 55 ஹெக்டயார் நிலப்பரப்பில் இடம்பெயர்ந்தவர்களை குடியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆராச்சி தெரிவித்துள்ளார். 

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறப்பது தொடர்பில் இந்நாட்களில் பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை எனவும், அறிவியல் ரீதியிலான தரவுகளின் அடிப்படையில் வான் கதவுகளைத் திறக்க கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஜே. ஹேரத் குறிப்பிட்டுள்ளார். 

பணிப்பாளர் நாயகம் நேற்று (09) பிற்பகல் கொத்மலை நீர்த்தேக்க அணைக்கட்டைப் பார்வையிட்ட பின்னர், கொத்மலை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். 
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், எதிர்காலத்தில் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறப்பதற்கு முன்னர் மக்களுக்கு அறிவிப்பதற்கு, தற்போது நடைமுறையிலுள்ள முறைமையை விட வேறு முறைமையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். 

பிரதான வீதிகள் தடைப்பட்டுள்ளதால் நீர்த்தேக்க அணைக்கட்டின் ஊடாக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நேற்று முதல் அணைக்கட்டின் மீது கனரக வாகனங்கள் பயணிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தடைப்பட்டுள்ள வீதிகள் சீராகும் வரை இலகு ரக வாகனங்கள் மட்டுமே அணைக்கட்டின் மீது பயணிக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன, நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதேவேளை, கம்பளை - நுவரெலியா வீதி, இலகு ரக வாகன போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
கட்டுகித்துல, ரம்பொடை நீர்வீழ்ச்சி மற்றும் தவலந்தென்ன ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், அவ்விடங்களில் வீதி தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.