Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழரசின் பிரதேச சபை உறுப்பினர்கள் கிளிநொச்சியில் சத்தியப்பிரமாணம்.

,

தமிழரசின் பிரதேச சபை உறுப்பினர்கள் கிளிநொச்சியில் சத்தியப்பிரமாணம்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டு கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சம்பிரதாயபூர்வ சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை, தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைத் தலைவருமான கெளரவ.சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும் ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளருமான கிருஷ்ணபிள்ளை சின்னராஜா, ஓய்வுநிலை அதிபரும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினருமான நாகலிங்கம் சோதிநாதன் ஆகியோர் முன்னிலையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.