Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சிறையில் இருந்தே திட்டமிட்ட சதி! திகிலூட்டும் பின்னணி!

யாழ். திருநெல்வேலியில் இளைஞன் படுகொலை: 6 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீதியில் துரத்தித் துரத்தி இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்தக் கொடூரச் செயலுடன் தொடர்புடைய 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், படுகொலையின் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறைச்சாலையில் உருவான கொடூரத் திட்டம்!
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலைச் சம்பவம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதி ஒருவரின் முழுமையான திட்டமிடலுடனும், அறிவுறுத்தலின் பேரிலுமே நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக, கொலை நடப்பதற்கு முதல் நாள் தெல்லிப்பழைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாக்குதலுக்கான ஒத்திகை (Trial Run) கூட நடத்தப்பட்டுள்ளது!

பல வருட பகைக்கு இரையான இளைஞன்:
கொல்லப்பட்ட இளைஞன், யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வரும் இரு வன்முறைக் கும்பல்களுக்கு இடையேயான பகையின் தொடர்ச்சியாகவே இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கொக்குவில் சந்தைக்குள் ஒரு இளைஞனைத் தாக்கிய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். தன்னைக் கைது செய்யக் காரணமாக இருந்தவர்கள் மீது பழிவாங்கவே சிறையில் இருந்த நபர் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
சந்தர்ப்பம் அறிந்து ஒரு மாதத்துக்கும் மேலாகப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, தகவல் பரிமாற்றத்திற்காகப் புதிய சிம் அட்டைகள் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நடந்தது என்ன? மழையில் நடந்த மிரட்டும் கொலை!
சம்பவ தினத்தன்று (ஞாயிற்றுக்கிழமை), இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, திருநெல்வேலி சந்தைக்கு அருகில் வைத்து நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறிக்க முயற்சித்துள்ளது.
இளைஞன் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி வீதியில் ஓடியபோது, வழிமறித்தவர்களும், பின்னால் துரத்தி வந்தவர்களும் வாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
தப்பிக்க வழியின்றி, வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த இளைஞனின் காலை, கொலையாளிகள் கணுக்காலுடன் வெட்டித் துண்டித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்தார்.

காவல்துறையின் துரித நடவடிக்கை:
கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் துரித விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர், தாக்குதலாளிகள் வாகனமொன்றில் வன்னிப் பகுதிக்குள் பயணித்த வேளையில் மடக்கிப் பிடித்தனர்.
தற்போது, இந்தக் கொடூரச் செயலுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், தாக்குதல் நடத்தியவர்கள், தாக்குதலுக்கு உதவிய வாகனச் சாரதி, திட்டமிட்ட கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த நபர், மற்றும் வேவு பார்த்தவர்கள் ஆகியோர் அடங்குவர். தலைமறைவாகியுள்ள மேலும் இருவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.