2009ஆம் ஆண்டு ஏர் பஸ் ஏ330 விமான விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம்!
சுமார் 17 வருடங்களுக்குப் பின்னர் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு ரியோவில் இருந்து பாரிஸ் நோக்கி ஏர் பஸ் ஏ330 என்ற விமானம் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இவ் வழக்கில் ஏரட பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.720 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 17 வருடங்களுக்குப் பின்னர் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விமானத்தின் வேகத்தை அளவிடும் சென்சார்கள் பனி படிந்து பழுதடைந்தமையே இவ் விபத்துக்கு காரணம் என ஏர் பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் விளக்கம் அளித்தன. இவ் வழக்கு தொடர்பில் இரு விமான நிறுவனங்களுக்கு சாதகமான தீர்ப்பை கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் மேல்துமுறையீட்டு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களின் கவனக்குறைவாலேயே இம் மரணங்கள் சம்பவித்தது என தீர்ப்பளித்தது. மேலும் தொழிநுட்ப கோளாறுகளை சரிசெய்யத் தவறியமை மற்றும் விமானிகளுக்கான சரியான பயிற்சியின்மை போன்றவையே இதற்கு முக்கிய காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனவே இதனால் பாதிக்கப்பட்ட குடுமபங்களுக்கு தலா ரூ.2.51 கோடி என மொத்தம் ரூ.720 கோடிக்கும் அதிக தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதற்கிடையில் குறித்த விமான நிறுவனங்கள் இரண்டும் இத் தீர்ப்பை எதிர்த்து பிரான்ஸ் உயர்மட்ட நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அறிவித்துள்ளன.


