Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்!

,

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வின் போது நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஆழிப்பேரலையின் 21-வது ஆண்டு நினைவேந்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள்  நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் கொட்டும் மழையில் நனையாமல் இருப்பதற்காக, கடற்தொழில் அமைச்சர் ஒரு கையால் குடை பிடித்தபடி தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். அதன் போது கூட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.

தேசியக் கொடியை ஏற்றும் போது அதற்குரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்றும், மழையில் நனைந்தாவது கொடியை ஏற்றியிருக்க வேண்டும் அல்லது குடையை மற்றவர்கள் பிடித்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தேசியக் கொடி ஏற்றப்படும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மீறப்பட்டதாகப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.