சுன்னாகம் பொலிஸாருக்கு பயந்து விஷமருந்திய இளைஞன்!
,
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புன்னாலைகட்டுவன் பகுதியில் பல காலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த 26 வயது உடைய இளைஞன் ஒருவர் சுன்னாகம் பொலிஸார் தன்னை
கைது செய்யப் போகின்றார்கள் என்ற பயத்தில் உயிர் மாய்ப்பதற்காக விஷமருந்திய அருந்தியுள்ளார்.
அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்பொழுது அவர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும் அவருக்கு பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியாக தற்போது இருக்கின்ற சிவானந்தம் நிதர்சன் வருகை தந்ததற்கு பிறகு பல குற்ற செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு குற்றச் செயல்களும் குறைவடைந்து இருப்பதும் காணக்கூடியவாறு இருக்கின்றது.


