Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

"கிரீன்லாந்து அமெரிக்காவுக்கே! ஐரோப்பாவால் தடுக்க முடியாது!" - ட்ரம்ப் அதிரடி!

"எனக்கு நோபல் பரிசு கிடைக்காததால், இனி நான் உலக அமைதியைப் பற்றி மட்டும் கவலைப்படத் தேவையில்லை," - ட்ரம்ப்.

"கிரீன்லாந்து அமெரிக்காவுக்கே! ஐரோப்பாவால் தடுக்க முடியாது!" - ட்ரம்ப் அதிரடி!

"கிரீன்லாந்து தீவை அமெரிக்கா கைப்பற்றுவதை ஐரோப்பிய நாடுகளால் நீண்ட நேரம் எதிர்க்க முடியாது," என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பாணியில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 19, 2026 (நேற்று) திங்கட்கிழமை புளோரிடாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தைக் கைப்பற்றும் தனது திட்டத்திலிருந்து பின்வாங்குவதாக இல்லை."நமக்கு அது வேண்டும்!"

"ஐரோப்பியர்கள் என் திட்டத்தை எதிர்ப்பார்கள். ஆனால், அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. கிரீன்லாந்து நமக்குக் கண்டிப்பாக வேண்டும்," என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் ட்ரம்ப். எதிர்ப்புக் தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டையொட்டி, இந்த விவகாரம் குறித்துப் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் சம்மதித்துள்ளார்.

நிலைமையைச் சமாளிக்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். பாரிஸில் ஜி-7 (G7) உச்சிமாநாட்டைக் கூட்டவும், அதில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளை "சிறப்பு அழைப்பாளர்களாக" அழைக்கவும் அவர் ட்ரம்ப்பிற்குத் தனிப்பட்ட செய்தி அனுப்பியுள்ளார். உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்யா அழைக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்ற பேச்சு எழுந்தபோது, அமெரிக்கக் கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் அதை "முட்டாள்தனமானது" என்று வர்ணித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "கிரீன்லாந்து அமெரிக்காவிற்கு ஒரு முக்கியமான சொத்து. வரலாற்றைப் பாருங்கள்... பனாமா கால்வாயை நாம் பிரான்சிடமிருந்து வாங்கினோம். வர்ஜின் தீவுகளை டென்மார்க்கிடமிருந்து விலைக்கு வாங்கினோம். அப்போது ஜெர்மனியைப் பார்த்து டென்மார்க் பயந்தது. இப்போது அவர்கள் சீனாவைக் கண்டு அஞ்சக்கூடும். ஆனால் சீனச் சுரங்க நிறுவனங்களை அவர்கள் ஏற்கனவே அனுமதித்துள்ளார்கள் அல்லவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நோபல் பரிசு கிடைக்காத விரக்தியா?
இந்த விவகாரத்தில் ஒரு ருசிகரமான சர்ச்சையும் வெடித்துள்ளது. கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கிடைக்காமல், வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்குச் சென்றதில் ட்ரம்ப் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நார்வே பிரதமருக்கு ட்ரம்ப் அனுப்பியதாகக் கூறப்படும் செய்தியில், "எனக்கு நோபல் பரிசு கிடைக்காததால், இனி நான் உலக அமைதியைப் பற்றி மட்டும் கவலைப்படத் தேவையில்லை," என்ற ரீதியில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், "நோபல் பரிசுக்காகத்தான் அதிபர் இப்படிச் செய்கிறார் என்பது அபத்தமானது," என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் மறுத்துள்ளன.