Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நீதிமன்ற உத்தியோகத்தர்கள், அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்படக்கூடியவர்கள் - விநாயகமூர்த்தி ராம கண்ணன்.

குறிப்பாக நீதிமன்றத்தினை நாடி வருபவர்கள், அவர்கள் விருப்பத்துடன் நீதிமன்றத்துக்கு வருவதில்லை.

நீதிமன்ற உத்தியோகத்தர்கள், அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்படக்கூடியவர்கள் என்பதனை நிறைவேற்றி காட்டி உள்ளனர்.

தற்போது உள்ள நீதி அமைச்சு  நீதிமன்றங்களில் உள்ள சான்று பொருட்கள் ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது என்று சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இப்பொழுது நீதிமன்றங்களில் சான்று பெருட்கள் ஒரு வருடத்திற்குள்  வழக்குகள் முடிக்கப்பட்டு, அழிக்கப்பட வேண்டிய பொருட்கள் அழிக்கப்பட்டும்,  ஏனை பொருட்கள் நீதிமன்ற நடவடிக்கை மூலம் அவை ஏல விற்பனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றங்களில் இருந்து அவை இல்லாமல் செய்யப்படுகின்றன.
இதற்கு அரச உத்தியோகத்தர்களின் வினைத்திறனான செயல்பாடே காரணம்.

 எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் ஆகிய நீங்கள், உங்களுடைய கடமைகளை அர்ப்பணிப்புடன், செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
 இவ்வாறு தெரிவித்தார், வட மாகாண மேல் முறையிட்டு குடியியல் நீதிமன்ற நீதிபதி விநாயகமூர்த்தி ராம கண்ணன்.

ஆண்டின் முதல் தொடக்க நாளான நேற்றைய தினம் (1)அரச உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணமும் பணிகளை ஆரம்பிக்கும் முதல் நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
 இதன் போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

 குறிப்பாக நீதிமன்றத்தினை நாடி வருபவர்கள், அவர்கள் விருப்பத்துடன் நீதிமன்றத்துக்கு வருவதில்லை.
துரதிர்ஷ்ட  வசமாக அவர்கள் நீதிமன்ற சேவையினை பெற வேண்டியவர்களுக்கு ஆளாகின்றனர்.

அவ்வாறு வரும் போது மக்களை நீங்கள், அன்பாக அரவணைத்து அவர்களுடைய முகம் கோனாத வகையில், அவர்களுடைய சேவைகளை விரைவாக வழங்க வேண்டும் என்பதை நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.
இங்கு வரும் பொதுமக்கள் எவ்வளவோ வறுமைக்கு மத்தியில் வருகின்றார்கள். உள ரீதியான கஷ்டம், பணரீதியான கஷ்டம், போன்ற பல்வேறு சுமைகளுடன் வருகின்றவர்களை நாங்கள் அதிகார தொணியில், கதைப்பதனையும் அவர்களை அலட்சியப்படுத்துவதனையும், தவித்துக் கொள்ள வேண்டும்.

இந்த நீதிமன்றத்திற்கு வருபவர்கள் எவ்வாறு மனக்கசப்பு உள்ளாகி வருகின்றார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே நீங்கள் அனைவரும் நீதிமன்ற சேவையினை பெற்றுக்கொள்ள வருகின்றபோது மக்களுக்கு உங்களால் ஆன  உதவியினை வினைத்திறனுடன் செயல்படுத்த வேண்டுமென நான் கேட்டுக் கொள்கின்றேன்.

 கடந்த காலம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது அரச உத்தியோர்கள் மிகவும் வினைத்திறனுடன் செயல்பட்டு இந்த நாட்டை மீளவும் கட்டி எடுப்பதற்கு அவர்கள் பணிபுரிந்துள்ளார்கள் என்பதனை காணக்கூடியதாக இருந்தது என நீதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.