Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த பதவிக்கு, சட்டத்தரணியாக 4 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சேவையாற்றி இருக்க வேண்டும் என்ற தகுதியே அறிவிக்கப்பட்டிருந்தது.

நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 
நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர நீதவான் பதவிக்கான தகுதிகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, குறித்த பதவிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய 4 தகுதிகளை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கு செயற்பாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபட்டிருக்கும் சட்டத்தரணியாக இருத்தல், சட்டத்தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்து 3 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்தைக் கொண்டுள்ள, உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது சட்ட ஆராய்ச்சி அதிகாரியாகப் பணியாற்றிய சட்டத்தரணியாக இருத்தல் ஆகியவை குறித்த தகுதிகள் ஆகும். 

அத்துடன் ஏதேனும் அமைச்சு, திணைக்களம், அரச கூட்டுத்தாபனம் அல்லது பிற அரச நிறுவனமொன்றில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் குறித்த தகுதிகளில் அடங்கும். 
ஏதேனும் நிறுவனம், வங்கி அல்லது நிறுவனத்தில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் நீதிச் சேவை இரண்டாம் தரத்தின் முதலாம் தர நீதவான் பதவிக்கான தகுதியாகும் என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னர் குறித்த பதவிக்கு, சட்டத்தரணியாக 4 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சேவையாற்றி இருக்க வேண்டும் என்ற தகுதியே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சேவைக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கு இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.