Breaking News
தனியார் கல்வி வகுப்புகளை நடாத்துவதை மட்டுப்படுத்தி, மேல் மாகாண ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இடைநிறுத்தம்!
.
மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை நடாத்துவதை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் மாணவர்களுக்கான கட்டணக் கல்வி வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதித்து மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சுற்றறிக்கைக்கு ஆட்சேபனைகள் எழுந்ததையடுத்து அதனை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.