Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

சிறீதரன் எம்.பி. - கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சந்திப்பு

.

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி,  முடிக்குரிய சுதேசியக் குடிகள் விவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் ஜேமி பாடிஸ்டி, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்செஸ்கோ சோர்பரா ஆகியோருக்கும்  இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கடந்த வார இறுதியில் கனேடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதில் பின்னிற்கும் சர்வதேச அரங்கில்,  ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் புரியப்பட்டது இனப்படுகொலை தான் என்றும்.

இறுதிப்போரின் போது கொல்லப்பட்டோருக்காகவும், மனித உரிமை மீறல்களை சந்தித்தோருக்காகவும் நாம் தொடர்ந்தும் நீதி கேட்போம்" என்றும் வலியுறுத்தி வருவதன் மூலம் ஈழத்தமிழர்களின் நீதியின் முகமாக கனடாவை அடையாளப்படுத்தும் வகையில் 2022.05.20 ஆம் திகதி கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு காரணமாக இருந்த ஹரி ஆனந்தசங்கரிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நன்றி தெரிவித்திருந்ததுடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.