யாழில் மக்களை காக்கும் காவல்துறை பெண்ணிடம் சேட்டை; மடக்கிப்பிடித்த கணவன்!
.
யாழில் தனது மனைவியுடன் சேட்டை புரிந்த காவல்துறை உத்தியோகஸ்தரை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த கணவன்.
இலங்கை காவல்துறையினர் பாலியல் சேட்டைகளும் பாலியல் பலாத்காரங்களும் செய்வது நீண்டகால வரலாறு ஆகும். பாலியல் சேட்டை, பாலியல் பலாத்கார ஆயுதமாகவும் பாலியல் சேட்டை பொழுதுபோக்காகவும் தமிழர்கள் மீது மட்டுமல்ல சிங்கள மக்கள் மீதும் இலங்கை காவல்துறையினர் அவ்வப்போது புரிந்து வருகின்றனர் இது உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் பணிபுரிகின்ற ஸ்ரீலங்கா காவல் துறையினர் இடையேயும் இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பாலியல் பலாத்காரங்களும், பாலியல் படுகொலைகளும் தமிழ் மக்கள் மீது குறிப்பாக தமிழ் பெண்கள் மீது வெளிப்படையாக நடத்தப்பட்டது. யுத்த காலத்திற்குப் பின்னர் இது மறைமுகமாக தொடர்கிறது. ஸ்ரீலங்கா நீதித்துறையி டமும், நீதிமன்றங்களிடமும், அரசாங்கத்திடமும் இதனை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நடந்த குற்றத்திற்கான பதில்கள்,தண்டனைகள் எதுவும் கிடைக்கப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவருடன் சேட்டை புரிந்த காவல்துறை உத்தியோகஸ்தரை , பெண்ணின் கணவரும் , ஊர் இளைஞர்களும் ஒன்றிணைந்து மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
காங்கேசன்துறை காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் அப்பகுதியில் தையலகம் நடாத்தும் பெண்ணொருவரிடம் தனது சீருடையை தைக்க கொடுத்துள்ளார்.
தைத்த சீருடையை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை எடுக்க சென்ற வேளை , தையலகத்தினுள் வைத்து , அப்பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முற்பட்டுள்ளார். அத்துடன் , தையலகத்திற்கு வந்த மேலும் இரு பெண்களுடனும் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இது குறித்து , தையலக பெண் , தனது கணவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததை அடுத்து , தையலகத்திற்கு , சில இளைஞர்களுடன் விரைந்த கணவன் , தகாத முறையில் நடக்க முற்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தரை மடக்கி பிடித்து , காவல் நிலையத்தில் கையளித்துள்ளாா்,
குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்நிலையத்தில் கையளிக்கப்பட்ட நிலையிலும் குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் , பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருடனும் ஏனைய இளைஞர்களுடனும் காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்பாக முரண்பட்டு , தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளார்.
அதேவேளை , காவல் நிலைய பொறுப்பதிகாரி , பாதிக்கப்பட்டவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டமையால் , சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய இணைப்பாளர் த கனகராஜிடம் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்தததை அடுத்து , அவர் , காவல் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு , பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டை ஏற்று , சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.
அதனை அடுத்து பொறுப்பதிகாரி முறைப்பாட்டை ஏற்றதை அடுத்து, சம்பவம் தொடர்பில் காவல்துறையிஜனர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.