உலகிலேயே மீக நீண்ட தூர பாதையாத்திரை கதிர்காமத்தை சென்றடைந்தது!
.
கதிர்காமகந்தன் ஆலைய வருடாந்த கொடியேற்றத்தையிட்டு பக்தர்கள் தமது நேத்திக்கடனை செலுத்துவதற்காக யாழ்ப்பாணம் செல்வசந்நிதி முருகன் ஆலையத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலையம் சென்று அங்கிருந்து திருகோணமலையில் ஆலையங்களை தரிசித்து அங்கிருந்து வெருகலம்பதி முருகன் ஆலையம் சென்று வாகரை ஊடாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையம் சென்று தரித்து, அங்கிருந்து திருக்கோவில் சித்திரவேலாயுத சுமவாமி ஆலையத்தை தரிசித்து அங்கிருந்து பாணமை ஊடாக உகந்தை முருகன் ஆலையத்தை சென்று தரிசித்து அங்கிருந்து கட்டுவழியாக சுமார் 55 கிலோமீற்றர் தூரம் ஆறுகள் குளங்களை கடந்து காட்டில் அமைந்துள்ள கபிலவத்தை முருகன், மற்றம் வைரவர், ஆலையங்களை தரிசித்து செல்லக்கதிர்காமம் சென்று வழிபட்டு சுமார் 850 கிலோ மீற்றர் தூரம் சுமார் ஒருமாதகாலம் நடந்து கதிர்காமகந்தன் ஆலையத்தை சென்று கொடியேற்றத்தை கண்டு தரிசித்து தமது நோத்திக்கடன்களை நிறைவேற்றுவது வழக்கம்.
இதனடிப்படையில் கதிர்காமத்துக்கான உகந்தை காட்டுவழி பாதை கடந்த 30 ஆம் திகதி சமய சடங்குகளுடன் திறக்கப்பட்டது.
இதனை அடுத்து அங்கிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பகத்தர்கள் சுமார் 5 நாள் நடைபயணமாக கதிர்காமத்தை சென்றடைந்தனர்.