Breaking News
மாதம்பை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 27 பேர் காயம்!!
.
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை , இரட்டைக்குளம் பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் பயணிகள் பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இன்று (04) காலை 9.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் ஹலாவத்தை மற்றும் மாதம்பை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து தேவாலய சந்தி ஊடாக சிலாபம் நோக்கி பயணித்த ஹலாவத்தை டிப்போவிற்கு சொந்தமான இ.போ.ச பஸ் ஒன்று, வேக கட்டுப்பாட் இழந்து, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியில் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த விபத்தில் பஸ் வண்டிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.