Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கரைநகர் போக்குவரத்து சபை பேருந்து சாரதிகள் பணிபுறக்கணிப்பு!

கரைநகர் போக்குவரத்து சபை சாலையின் பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் தனியார் பேருந்து சாரதி ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளார்.

 கரைநகர் போக்குவரத்து சபை பேருந்து சாரதிகள் இன்றைய  தினம்(19) பணிபுறக்கணிப்பில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

 கரைநகர் போக்குவரத்து சபை சாலையின் பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் தனியார் பேருந்து சாரதி ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவத்தில் தலையில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சந்தேக நபரை கைது செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவிக்கின்றனர்.  

பாதுகாப்பு பிரச்சனையை காரணம் காட்டி தாம் பணி புறக்கணிப்பில் நாளைய தினம்(19) ஈடுபடப் போவதாக காரைநகர் போக்குவரத்து சபை சாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர். 

நேற்றைய தினம்(17) யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்ட 782 வழித்தட பேருந்தை மூளாய் சந்தியில் வழிமறித்த நபர் ஒருவர், பேருந்துக்குள் புகுந்து சாரதி மற்றும் நடத்தினரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் சாரதிக்கு இரும்பு கம்பியால் தலையில் தாக்கிய நிலையில் அவர் முதலில் வலந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் 24வது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கதிரவேலு விஜயகுமார் வயது (47) என்ற சாதியும், எஸ் லிகிந்தன் வயது (33 )என்ற நடத்தினரும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, சாரதி நடத்தினரை தாக்கிய குற்றவாளியை  கைது செய்வதற்கு இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் தற்பொழுது கிராமத்தில் இருந்து தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.