பலதும் பத்தும் :- 22,02,2025. கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை.
.

- இன்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அரசியலமைப்பு விவகாரங்களுக்கானகுழுவை நியமிப்பதாக அறிவித்தார். அதன்படி இந்தக்குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபைத் தலைவர்பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன நாணயக்கார, பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும்நிஹால் அபேசிங்க ஆகியோர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல்போக்குவரத்து சேவை 3 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் 83 பயணிகளுடன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்குபுறப்பட்டுள்ளது. மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தைசென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்துயாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் கப்பல் சேவையானது நவம்பர் மாதம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா- இலங்கை இடையிலான கப்பல்சேவை மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படும் என கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்தது. அதன்படி இன்று கப்பல்சேவை தொடங்கியுள்ளது. இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் எனவும், www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
- யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நிலவிவரும் மருத்துசேவை ஊழியர்களுக்கானவெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சால் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின்பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள அரச மருத்துவமனைகளில் காணப்படும் மனிதவள தேவைகளை இனங்கண்டு அவற்றிற்குஉரிய தீர்வுகளை பெற்று தரும் நோக்குடன் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட கண்காணிப்புபயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஊர்காவற்றுறை பொது மருத்துவமனை, வேலணை மாவட்ட மருத்துவமனை, வேலணை சுகாதாரமருத்துவ அதிகாரி அலுவலகம், ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், யாழ்.போதனாவைத்தியசாலை, சாவகச்சேரி பொது வைத்திய சாலை மற்றும் மாங்குளம் பொது வைத்தியசாலை ஆகியவற்றில்மனித மற்றும் பௌதீக வளங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக சுகாதார அமைச்சுதெரிவித்துள்ளது. வைத்தியசாலையில் உள்ள மனித மற்றும் பௌதீக வளங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பிலானபிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தனதெரிவித்துள்ளார்.
- யாழில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வேகமாக பயணித்த வாகனம் மோதியதில் 6 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, நேற்றைய தினம் (21) யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு பூதவுடலை எடுத்துசென்றவர்கள் மீது, அவ் வீதியில் வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிசென்றுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வாகனம் தொடர்பில், கண்காணிப்பு கமராக்களின் காணொளிகள்அடிப்படையில் தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
- இன்று காலை நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறைக்கு, சிவகங்கை கப்பல் புறப்பட்டது. இவ்வாறு புறப்பட்டகப்பலானது இன்று மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவைமேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்குபுதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களால் சென்றஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில்இ இந்தியாஇஇலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று தொடங்கியுள்ள நிலையில் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
- திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் தம்பலகாம ம்பிரதேசங்களில் இலங்கைஉள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில் வீதி நாடகங்கள் இளைஞர் குழாத்தினால்மேற்கொள்ளப்பட்டன. இளைஞர்களின் பங்களிப்புடன், பெண்களின் அரசியல் பங்குபற்றலின் அவசியத்தைமக்களிடையே விழிப்பூட்ட இந்த நாடகங்கள் வடிவமைக்கப்பட்டன. பழமையான பாரம்பரியச் சிந்தனைகள், பாலினத்திற்கிடையேயான சவால்கள் மற்றும்பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து சிந்திக்க தூண்டும் வகையில் இவ்வீதிநாடகங்கள் அமைந்திருந்தன.
நாடகம் நடைபெற்ற இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டுநாடகங்களை கவனித்ததோடு, பெண்கள் அரசியலில் பங்கெடுப்பது குறித்து தங்கள்கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். பெண்கள் சமூகத்தில் முடிவெடுக்கும் அதிகார நிலையங்களில் பங்கேற்பதை உறுதிப்படுத்தஎதிர்காலத்திலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என பொதுமக்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தி பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனைபொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளை உடனடியாக பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் சந்தேகநபர்களைஅழைத்துச் சென்றபோது சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள்உயிரிழந்துள்ளனர்இதில் ஒரு பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.