விவசாய அபிவிருத்தி திணைக்களம்: பயிரிடப்படாத வயல் காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள திட்டம்.
.
-54055599.jpg)
பயிரிடப்படாத ஒரு இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான வயல் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
''பிடியளவு கமநிலத்திற்கு'' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பயிரிடப்படாத வயல் காணிகளில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் திட்டத்திற்கமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ரோஹண ராஜபக்ஸ தெரிவித்தார்.
குறித்த வயல் காணிகளில் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சில காணிகளை நெற்பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தவும் காணிகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் வேறு பயிர்ச்செய்கைகளுக்காக சில காணிகளை அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
அனைத்து காணிகளிலும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான இயலுமையை ஏற்படுத்துவதற்காக காணிகளின் உரிமையாளர்களை தௌிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ரோஹண ராஜபக்ஸ தெரிவித்தார்.