Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

விடுவிக்கப்படவிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழப்பு

.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பணயக் கைதிகள் தொடர்பான ஹமாஸின் பட்டியலை மேற்கோள் காட்டி இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஏனைய 25 பேர் உயிருடன் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸிடமிருந்து பணயக் கைதிகளின் தகவல்களைப் பெற்ற இஸ்ரேல், அவர்களின் நிலைமை குறித்து குடும்பங்களுக்கு அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளில் ஒரு தொகுதியினர் நாளை மறுதினமும், மற்றுமொரு தொகுதியினர் எதிர்வரும் சனிக்கிழமையும் விடுவிக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.