Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

செம்மணி இனப்படுகொலைக்கு சஜித் தான் காரணம் - தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்!

.

செம்மணி இனப்படுகொலை 1983 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசவினால் தான் நடாத்தப்பட்டது என்று மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்  வெளிப்படையாகாத் தெரிவித்துளார். 
நேற்று இடம்பெற்ற மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரான லோ.ரமணன் செம்மணி உட்பட ஏனைய இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான வினோத்தனு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
தனு "இது தேவையற்ற விடயம். இந்த விடயம் இதில் கதைக்கப்பட தேவையில்லை. இந்த இனப்படுகொலை 1983ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசவினால் தான் நடாத்தப்பட்டது. நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக இந்த விடயம் பேசப்பட்டது" என்றார்.
இதன்போது குறுக்கிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான செ.ஞானரூபன் "ரமணனின் தாய் கட்சிதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். அவரை ஏன் கதைக்க அனுமதித்தீர்கள்" என கூறினார். இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் மௌனம் காத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர், "ஒருவர் வெளிநடப்பு செய்யும்போது அதற்கான காரணத்தை கூறிவிட்டு வெளிநடப்பு செய்யலாம். அது அவரது உரிமை. அதற்கு அனுமதி வழங்க வேண்டிய தேவை இல்லை. அவர் இல்லாத இடத்தில் அவர் தொடர்பான விடயங்களை பேசுவது ஆரோக்கியமானது அல்ல. எனவே அவர் சபைக்கு வந்த பின்னர், அந்த விடயங்கள் பேசப்படும்போது அதுகுறித்து பேசலாம் என்றார்.