Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஊடகவியலாளர்களுக்கு காவற்துறையினர் தடையேற்படுத்தினர்!

,

செம்மணி மனிதப் புதைகுழியினை  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேரில் பார்வையிடுவதனை ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிட காவற்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.

 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்  நேற்றைய தினம் (25.06.25) யாழ்ப்பாணம் வருகை தந்து செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
 
அதனை செய்தி அறிக்கையிடும் நோக்குடன் ஊடகவியலாளர்கள் சென்ற போது , அதற்கு பொலிஸார் அனுமதி மறுத்திருந்தனர்.
 
புதைகுழி காணப்படும் இடத்திற்கு சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு முன்பாகவே ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என கூறி இருந்தனர்.
 
எதற்காக அனுமதியில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மேலிடத்து உத்தரவு என அங்கிருந்த பொலிஸார் பதிலளித்திருந்தனர்.
 
செம்மணி புதைகுழியினை நேரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்  பார்வையிடும் ஒளிப்படங்கள் , காணொளிகள் வெளிவருவதை தடுக்கும் நோக்குடனையே பொலிஸார் அவ்வாறு செயற்பட்டனர் என குற்றம்சாட்டப்படுகிறது