Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி.!

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள்

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி.!
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ. செந்தூரன் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த போட்டிகளில் 6 அணிகளில் பங்குபெற்றுவதற்காக 170 க்கும் மேற்பட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் மூன்று அணிகளுக்கான உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. ஆவரங்கால், அச்சுவேலி, புத்தூர் அரியாலை, நீர்வேலி ,வடமராட்சி வலிகாமம்  மற்றும்  தீவகம் ஆகிய அணிகள் சார்பில் வீரர்கள் பங்கு பெற்ற உள்ளனர். 

குறித்த விடையம் தொடர்பில் தெளிவு படுத்திய சங்கத்தின் செயலாளர் தவபாலன் மூன்றாவது தடவையாக இடம்பெறும் யாழ் மாவட்ட  கரப்பந்தாட்ட பிரிமியர் லீக் போட்டியானது கிராமங்களில் இருக்கும் கரப்பந்தாட்ட வீரர்களை தேசிய நீதியில் பிரகாசிப்பதற்கு வாய்ப்புகளை வழங்கும் ஒரு போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. எதிர் வரும் மாதம் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.