Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையின் ஏற்றுமதித் துறையைப் பாதிக்கும் எரிபொருள் விநியோகச் செயல்முறை

,

இலங்கையின் ஏற்றுமதித் துறையைப் பாதிக்கும் எரிபொருள் விநியோகச் செயல்முறை மற்றும் அது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதற்காக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கும் (EDB) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் (CPC) இடையே அண்மையில் ஒரு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
 ஏற்றுமதியாளர்கள் எரிபொருளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள், விநியோகத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நம்பகமான எரிபொருள் விநியோக அமைப்பு தேவைப்படுவது ஆகியவை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
 
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வேண்டுகோளின் பேரில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு நேரடியாகப் பங்களிக்கும் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
 
ஆடை, இரத்தினம் மற்றும் ஆபரணம், மின்னணுவியல், கடல்சார் தொழில்கள், மருந்துப் பொருட்கள், பீங்கான், இறப்பர் மற்றும் தொழில்நுட்பத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களும் சங்கங்களும் இதில் அடங்கும்.
விசேடமாக, ஒருங்கிணைந்த ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம், இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம், இலங்கை கடல்சார் கைத்தொழில் சபை, இலங்கை மருந்து உற்பத்தியாளர்களின் சங்கம், இலங்கை ஓட்டுத் தொழிற்சாலை மற்றும் கண்ணாடி சபை (SLCGC), தொழில் சார் பொறியியலாளர் சங்கம், இலங்கை மென்பொருள் மற்றும் சேவை சங்கம் ( SLASSCOM) இலங்கை அச்சகர்கள் சங்கம் (SLAP) இலங்கை இலத்திரனியல் உற்பத்தியாளர்களின் மற்றும் ஏற்றுமதியாளர்களின் சங்கம் போன்ற முன்னணி சங்கங்கள் பல இதன் போது தமது கருத்துக்களை முன்வைத்தன.