சபாநாயகரது கூற்று தனிப்பட்ட ரீதியிலான சேறு பூசும் செயல்!
,

ஏதேனும் ஒருவரின் சொத்துக்களை அரசமயமாக்கும் நோக்கம் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளின் போது சிலவேளைகளில் இலங்கை பொலிஸில் உள்ள சில சிக்கல்கள் காரணமாக அந்நடவடிக்கை பாதிக்கப்படலாம். எனவே அது தொடர்பிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று (08) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனது கல்வி நிலைக்கு ஏற்ற வகையில் சிறந்த பிரேரணையொன்றை முன்வைத்தமை தொடர்பில் ஹர்ஷன நாணயக்கார அவர்களுக்கு முதலில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பிரேரணை தொடர்பில் உரையாற்றிய பலரும் இது தொடர்பில் விமர்சிக்க எதுவும் இல்லை. இது ஒரு நல்ல பிரேரணை என தெரிவித்திருந்தனர். எனவே நீதி அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இதில் மூன்று விடயங்கள் தொடர்பில் உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
பிரேரணையின் 53 ஆவது பிரிவின் கீழ் 53.4 பீ பிரிவில் அது நியாயப்படுத்தப்படக் கூடிய தொகையா என்பது தான் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட தொகைக்கு மேலான மோசடி என்ற விடயம் உள்ளடக்கப்படின் சிறப்பாக அமையும்.
இதில் 71 ஆவது பிரிவில் புலனாய்வு அதிகாரி ஒருவருக்கான அதிகாரம். அவருக்கு நீதிமன்றத்திற்கு அறிக்கையிடும் முறைமையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். ஏதேனும் ஒருவரின் சொத்துக்களை அரசமயமாக்கும் நோக்கும் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளின் போது சிலவேளைகளில் இலங்கை பொலிஸில் உள்ள சில சிக்கல்கள் காரணமாக அந்நடவடிக்கை பாதிக்கப்படலாம். எனவே அது தொடர்பிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த பறிமுதல் செய்யப்படும் சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் குற்ற மேலாண்மை அதிகாரசபையில் 11 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். அதில் நால்வர் செயலாளர்கள். எஞ்சிய ஏழு பேர் அமைச்சரால் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. அவர்களுக்கு மாதாந்த அல்லது வருடாந்த கொடுப்பனவா மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பிலும் குறிப்பிடப்படின் சிறப்பாக அமையும்.
முன்னைய விவாதத்தின் இறுதி 2 மணிநேர காலப்பகுதியில் சபையில் சபாநாயகர் ஒரு கூற்றை முன்வைத்திருந்தார். அந்த கூற்றை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். கடந்த அரசாங்கத்தில் பசில் ராஜபக்ஷ அவரை பீ.ஆர். என்றே அழைக்கப்படுவார்.
கடந்த அரசாங்கம் கவிழ்வதற்கு இந்த பீ.ஆர். தான் காரணம். பிமல் ரத்னாயக்க அவர்களும் பீ.ஆர். தான். இறுதி 2 மணிநேர காலப்பகுதியில் சபாநாயகரது கூற்று தனிப்பட்ட ரீதியிலான சேரு பூசும் செயலாகும்.
ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் தொடர்பில் நான் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தேன். அந்த குற்றச்சாட்டுக்கு பயந்து மிகவும் கீழ்த்தரமான சேரு பூசும் செயலை மேற்கொண்டார். கடந்த அரசாங்கத்தில் ஜனாதிதி ரணில் விக்ரமசிங்க வடக்கு கிழக்கில் உள்ள உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடுகளை வழங்கினார்.
பிரதேச செயலாளர் அலுவலகத்தின் ஊடாகவே அது வழங்கப்பட்டது. இங்குள்ள பல உறுப்பினர்களுக்கு அது வழங்கப்பட்டது. ஸ்ரீநேசன் உறுப்பினருக்கு கிடைத்ததா என எனது கட்சியை சேர்ந்த எனது மாவட்ட உறுப்பினர்களிடம் கேட்கின்றார். அவர்கள் அதன்போது இந்த பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. ரணில் விக்ரமசிங்க எனக்கு பணம் வழங்கினார் என்பதற்காகவே அவரது இந்த கீழ்த்தரமான தாக்குதல் அமைந்தது.
அத்துடன் நான் ராஜபக்ஷேக்களுடன். ஆம், நான் இலங்கை சுதந்திர கட்சியின் அமைப்பாளராக இருந்தேன். அதனை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். எனது 22 வருட அரசியலில் நான் எடுத்த தவறான தீர்மானம் அது. இவர்கள் உறுப்பினர் ரவிராஜ் பெயரை குறிப்பிட்டனர். உறுப்பினர் ரவிராஜ் அவர்கள் கொல்லப்படும் போதும் பிமல் ரத்னாயக்க ராஜபக்ஷக்களுடனேயே பணியாற்றிக் கொண்டிருந்தார்.
எனவே பேசுவதற்கு எதுவும் இல்லாததற்காக எமக்கு சேரும் பூசும் செயலை முன்னெடுக்க வேண்டாம். நான் எனது மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றே வந்துள்ளேன். நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் அழுக்கில்லாத அரசியல் முன்னெடுக்கும் கட்சியினர். இம்முறை அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி அவர்கள் முழு இலங்கையிலும் வெற்றி பெற்ற போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியே வெற்றி பெற்றது. நான் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதை விடுத்து, இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.