Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதற்கு இணக்கம்

,

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

இராமேஸ்வரத்தின் அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சகாயம் தலைமையிலான இந்திய மீனவ பிரதிநிதிகள் குழு நேற்று (29) அமைச்சரை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.

நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பதை இந்திய மீனவர்கள் உணர்ந்தனர் என்பதை அறியமுடிந்தது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கும், இது தொடர்பில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இதற்கமைய அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் எனவும் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.