எந்த கட்சியுடனும் சேராமல் சுயேட்சை வேட்பாளராக சரத் பொன்சேகா.
ஜூன் மாதம் அவர் இது குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார் பொன்சேகா; ஜூன் மாதம் உத்தியோகபூர்வ அறிவிப்பு.
முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதம் அவர் இது குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
எந்த கட்சியுடனும் சேராமல் சுயேட்சை வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார்.
இதேவேளை ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவை சரத்பொன்சேகா பெற்றுள்ளார் ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்ததைகள் தொடர்கின்றன என முன்னாள் இராணுவதளபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சரத்பொன்சேகா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழல் அற்ற நாடு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரகலயவின் போது அவர்களிற்கு ஆதரவு வெளியிட்ட சரத்பொன்சேகா அந்த சந்தர்ப்பத்தில் தனக்கு கிடைத்த ஆதரவை பயன்படுத்த முயல்வார்.
தனது பிரச்சாரத்தின்போதுஅவர் புத்திஜீவிகள் பிரபல பிரமுகர்களுடன் இணைந்து செயற்படுவார். இதேவேளை தேர்தல் பிரச்சார காலத்தில் சரத்பொன்சேகா யுத்தம் குறித்த நூலை வெளியிடவுள்ளார் இந்த நூலில் யுத்தம் குறித்த பல முக்கிய விடயங்கள்இடம்பெற்றிருக்கும். இதேவேளை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் பிரதிநிதியாக முன்னாள் இராஜதந்திரியொருவர் சரத்பொன்சேகாவை சந்திப்பதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பினை நிராகரிக்காத சரத்பொன்சேகா எனினும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.