Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

மாகாண சபைத் தேர்தல் சட்டம்: செப்டம்பர் 3 ஆம் திகதி நிறைவேற்றப்படுமா?

.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக, பழைய மாகாண சபைத் தேர்தல் சட்டங்களை மீள நடைமுறைக்குக் கொண்டு வரும் நோக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம் எதிர்வரும் மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரியவருகின்றது.

பழைய மாகாண சபைத் தேர்தல் சட்டங்களை அப்படியே மீளக் கொண்டு வருவது தொடர்பான சுமந்திரன் எம்.பியின் தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்காக ஏற்கப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, அந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது சம்பந்தமாக தனது பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் வழங்கியும் விட்ட நிலையில், அந்தச் சட்டமூலம் அரசு தரப்பினரால் ஒரு வருடத்துக்கு மேல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

எனினும், பின்னர் அரசுத் தரப்புடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் கடந்த 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இப்போது உயர்நீதிமன்றப் பரிந்துரைகளுக்கு அமைவாக சட்டமூலத்தின் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்யும் நோக்கோடு, இன்று பிற்பகல் சட்டமூலங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலையியல் குழுவில் அது பரிசீலிக்கப்பட உள்ளது.

சட்டமூலத்தில் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தபடியான மாற்றங்கள் செய்யப்பட்ட எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அதனைச் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்தச் சட்டமூலத்தை எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மூன்றாம் வாசிப்புக்காக எடுத்து அங்கீகரித்து, உடனடியாக சட்டமாக்குவதற்கு நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறியவந்துள்ளது.