தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து தலைநகரில் பொதுக் கூட்டம்; கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அழைப்பு
.
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து கொழும்பில் இன்று பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் வெஸ்ற்றேனில் இந்த கூட்டம் மாலை 5.30க்கு இடம்பெறவுள்ளது.
இதில் பா.அரியநேத்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வர், சட்டத்தரணி புவிதரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகின்றார்.
இதுவரை ஆட்சி செய்த தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை மறுத்து வந்துள்ள நிலையில், இம்முறை வடக்கு கிழக்கு சார்பில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னணியில், தமிழ்த்தேசியப் பொது கட்டமைப்பின் கீழ் பா.அரியநேத்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு பெருகிய ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.