Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளைத் தொடருமாறு ரணில் கோரிக்கை!

அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறியது

மன்னாரில் அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறியது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருத்தம் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியின்போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார்.

மேலும், இந்திய முதலீட்டாளர்கள் உட்பட இலங்கை அரசாங்கத்தால் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தைத் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அனுர அரசாங்கம் முயற்சிப்பதன் பின்னணியில் உள்ள நியாயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை எதிர்காலத்தில் பெரிய அளவிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒரு தடையாக இருக்கும் என்றும் இது குறித்துத் தான் கவலை அடைவதாகவும் தெரிவித்தார்.

தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளைத் தொடருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதாகவும் கூறினார்.

இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்ட ஆசியாவை நோக்கி உலகளாவிய சக்தி மாற்றம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, இலங்கை அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.