Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கத்தார் விமானத்தில் ஏசி பழுது: வியர்வையால் நனைந்ததால் மேலாடைகளை கழற்றிய பயணிகள்

போயிங் 777 விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏ.சி. வேலை செய்யவில்லை.

34 டிகிரி வெயில் காரணமாக விமானத்திற்குள் வெப்ப நிலை அதிக அளவில் தாக்கியது

கிரீஸ் நாட்டின் எதென்ஸ் நகரில் இருந்து கத்தாரின் தோகாவிற்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏ.சி. வேலை செய்யவில்லை.

கிரீஸ் நாட்டில் தற்போது 34 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. சுமார் 3 மணி நேரம் பயணிகள் விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டது.

34 டிகிரி வெயில் காரணமாக விமானத்திற்குள் வெப்ப நிலை அதிக அளவில் தாக்கியது. இதனால் பயணிகள் வியர்வையால் நனைந்தனர். பெரும்பாலான பயணிகள் குறிப்பாக ஆண் பயணிகள் தங்களது மேலாடையை கழிற்றினர். தங்கள் மீது வடிந்தோடும் வியர்வையை சட்டையால் துடைத்தனர்.

அதேவேளையில் சில பெண் பயணிகள் அதிக வியர்வை காரணமாக மயக்கம் அடைந்தனர். இதனால் அருகில் இருந்த மற்ற பயணிகள் காற்று வீசி அவர்களுக்கு உதவி செய்தனர்.

பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு விமானத்தில் இருந்து பயணிகள் தரையிறக்கப்பட்டனர். இவ்வளவு அவதிப்பட்ட அவர்களுக்கு ஒரு கப் தண்ணீரும், சிறு குளிர்பானம் மட்டுமே வழங்கப்பட்டதாக ஆதங்கம் தெரிவித்தனர். சுமார் 16 மணி நேர காலதாமதத்திற்கு பிறகு மாற்று விமானம் மூலம் பயணிகள் தோகா சென்றடைந்தனர்.