Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கைத்தமிழரின் அரசியல் கோட்டை தகர்ந்ததா?

.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் கோட்டையாக கருதப்பட்டுவந்த வடக்கை அநுர அலை சரித்ததாகவும், தமிழ் தேசியத்தின் எதிர்கால நிலை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளதாகவும் அண்மைக்காலங்களில் சில அரசியல் கருத்துக்கள் மேலோங்கியிருந்தன.

ஆயினும் நடைபெற்று முடிந்த மாவீரர் தின நிகழ்வானது இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.தொடர்ந்தும் , ”தமிழ் தேசியம் தொடர்பான கருத்துக்கள் அண்மைக்கால அரசியலின் பேசுபொருளாகியது.

இருப்பினும் தமிழ் தேசியம் என்றால் என்ன என்பதை நடந்து முடிந்த மாவீரர் தினம் தெளிவாக கூறியது.ஆயினும் தற்போது தமிழ் தேசியம் அதற்கான சரியான தலைமைத்துவத்திற்காக காத்திருக்கின்றது.” என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.