மைச்சர் பொன்முடி 'OUT'... திருச்சி சிவா 'IN' - திமுகவில் 'அதிரடி' மாற்றம் ஏன்?!
,

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து இழிவாக பேசியதற்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், அவர் திமுக-வில் வகித்து வந்த துணை பொதுச் செயலாளர் பதிவி பறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அவர் வகித்து வரும் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-இன் படி, கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி., அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தி.மு.க. துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்படுகிறார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
