Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

சீரற்ற காலநிலை- யாழில் 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிப்பு

.

யாழ்ப்பாணத்தில்  ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1520 பேரும்,சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 266 குடும்பங்களைச் சேர்ந்த 932 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 371 குடும்பங்களைச் சேர்ந்த 1462 பேரும்,சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 416 குடும்பங்களைச் சேர்ந்த 599 பேரும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேரும் பாதிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 294 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 385 பேரும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேரும் வேலணை பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எழு பேரும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.