யுத்த காலத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் விடயத்தில் ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும்
யுத்த காலத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் விடயத்தில் ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும்
நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்ல வேண்டாம்; யுத்தத்தில் இறந்தவர்கள் தொடர்பில் உணர்வு பூர்வமாக செயற்படுங்கள்.
யுத்த காலத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன இலங்கை பிரஜைகளை நினைவுகூர்ந்து மூதூரில் கஞ்சி வழங்குவதற்கு செய்திருந்த ஏற்பாடுகளுக்கு யுத்த காலத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் விடயத்தில் ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும்
ஆனால், தமக்கு நெருக்கமானவர்களின் மரணம் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு இருக்கும் மனவேதனையை ஒரு சமூகம் என்ற வகையில் உணர்வுபூர்வமாக புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த நாட்டை இருண்ட யுகத்துக்குள் கொண்டுசெல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது ஒட்டுமொத்த சமுதாயத்தினரதும் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
அதற்கமைய அரச அதிகாரிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகமும் இது போன்ற சூழ்நிலைகளின்போது நாட்டின் பொது நலனை முதன்மையாக கருதி செயல்பட வேண்டும் எனவும் இல்லையேல் எமது நாட்டை மீண்டும் இருளில் தள்ளுவதற்கு அதுவே காரணமாக அமையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற பல்வேறு துர்பாக்கிய சம்பவங்களினால் உயிரிழந்த மற்றும் காணாமல் போன அனைவரை எண்ணியும் மிகுந்த மன வேதனை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, மீண்டும் இதுபோன்ற சூழல்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் அவர்கள் அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்புகளிடத்திலும் கோரிக்கை விடுப்பதாகவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய கோரியுள்ளார்.