பெண்கள் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் ; நிருபர் அறிவில்லாதவர், அல்லது தீவிரவாதியாக இருக்க வேண்டும். அபத்தமான பதில்!
.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 19 வயது மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புறக்கணித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 19 வயது பொறியியல் மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.
புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த இந்தச் சம்பவம், தமிழகத்தில் பரவலான சீற்றத்தைத் தூண்டி, பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்று நாடு திரும்பிய ரஜினிகாந்திடம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
அவர் தனது நடிப்பு திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தபோது, பெண்களின் பாதுகாப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அபத்தமான பதிலை அளித்தார்.
அந்த பதிலில் அவர், “என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள்” என்று ரஜினிகாந்த் கடுமையான தொனியில் பதிலளித்தார்.
இதனிடையே, ரஜினிகாந்த் தனது வரவிருக்கும் கூலி திரைப்படம் குறித்த புதுப்பிப்பைப் பகிர்ந்துள்ளார்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீத நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 13 முதல் ஜனவரி 28 வரை நடைபெறும் என்று இதன்போது கூறினார்.
ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத் திரைப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகுவதுடன், இதன் வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பு பற்றி கேள்வி கேட்ட நிருபர் ஒன்றில் அறிவில்லாதவர், அல்லது தீவிரவாதியாக இருக்க வேண்டும் ஏனெனில் சன் பிக்சரில் நடிக்கும் ரஜினியிடம் திமுக ஆட்சியில் நடக்கும் அல்லது திமுக கட்சியோடு சம்பந்தப்பட்டவருடைய பிரச்சினையை கேட்பது எப்படி நியாயமாகும். அதிலும் ரஜினிக்கு தகவல்கள் கொடுக்கப்படாத நிலையில் அவர் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பயங்கரவாதிகள் உள் நுழைந்ததாக கூறிய ரஜினி பெண்கள் பற்றி கூறாதிப்பது மிகவும் புத்திசாலித்தனமானது.நாங்கள் நடிக்க வந்தவர்கள் மற்றவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன நமக்கு பணம் தான் முக்கியம்.
உம்மைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட கொண்டாடத்தான் அறிவிலி கூட்டங்கள் அலிய அலையாய் மோதுமே! சினிமாவில் வீர வசனங்களும் வீர சகாசங்களும் அரசியலும் பேசினால் போதும்.