Breaking News
புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்திய அரசு நீடித்துள்ளது.
இந்திய அரசு தடையை நீடிப்பது ஆச்சரியம் இல்லை.
புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்திய அரசு நீடித்துள்ளது.
இந்திய அரசு தடையை நீடிப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் தடைக்காக கூறும் காரணங்கள்தான் ஆச்சரியமாக இருக்கிறது. புலிகள் அமைப்பு இப்பவும் இந்திய மண்ணில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. அதைவிட ஆச்சரியமாக இருப்பது வெளிநாடுகளில் இருக்கும் புலி ஆதரவு அமைப்புகள் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக கூறுவது. கடந்த வருடம் பாஜக தலைவர் அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டினார்கள். அவர்களுக்கு இந்திய அரசு அளித்துள்ள பதில் இதுதானா?
ஒன்று மட்டும் நன்கு புரிகிறது. காங்கரஸ் அரசாக இருந்தாலும் சரி பாஜக அரசாக இருந்தாலும் சரி அவர்களது ஈழத் தமிழர் மீதான வெளியுறவுக் கொள்கை என்பது ஒன்றாகவே இருக்கிறது.
இனியாவது இந்திய அரசை நம்பும் ஈழத் தமிழ்த் தலைவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.