Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வேலணை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேசுபொருகான 'அம்மாச்சி' - தீர்வுக்கு உத்தரவிட்ட ரஜீவன் எம்.பி.!

,

வேலணை "அம்மாச்சி" உணவகத்தை தரம் மிக்கதுடன் நுகர்வோரை ஈர்க்கும் வகையிலும் முன்கொண்டு செல்ல உரிய பொறிமுறை உள்வாங்கப்பட வேண்டும் என பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேலணை அம்மாச்சி உணவகத்தை அடுத்த ஆண்டுக்கான குத்தகைக்கு விடுவது மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்போது உணவின் தரம் சுகாதாரம் உறுதி செய்யப்படுவதுடன் அதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதார பகுதியினரும் அதிக அக்கறை செலுத்துவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக வேலணை அம்மாச்சி உணவகம் பாரம்பரிய உணவை மையமாக கொண்டதாக இருப்பதனால் மக்களதும் சுற்றுலாவிகளது வருகையை ஈர்க்கும் வகையிலும் நேரகாலத்துடன் இருப்பதும் அவசியம் என்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரால் வலியுறுத்தப்பட்டது.

இதே நேரம் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பிரதேச சபையே சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்போது உயிரினங்களின் பாதுகாப்பு, அவற்றின் நலன்களையும் அக்கறை கொண்டு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.