Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பலதும் பத்தும்:- 16,04,2025 - குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு ரி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால்கைப்பற்றப்பட்டுள்ளது.

சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு ரி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால்கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம்மீட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காககைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

பிபிலை ரதுபஸ்கெடிய பகுதியில் நேற்று மாலை (15)போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர்ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய ரதுபஸ்கெடிய பிபிலை பகுதியை சேர்ந்தவர் ஆவார். பிபிலை நொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனைக்குஉட்படுத்தியள்ளனர்.

இதன்போது

01.ஹெரோயின்  5 கிராம் 500 மில்லிகிராம் 

02.ஐஸ் 2 கிராம் 20 மில்லிகிராம் 

03.ஹுஸ் 730 மில்லிகிராம் 

04.Neurovan ரக போதை மாத்திரைகள் 27

05.தடைசெய்யப்பட்ட கத்திகள் 03   ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை பிபிலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளைமேற்கொண்டு வருவதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்தநிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும்ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது .  அமெரிக்க-இஸ்ரேலிய பனைய கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் இந்த குண்டு வீச்சு தாக்குதல்மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கைதிகளின் நிலமை என்னவென்று இதுவரை தகவல் பெற முடியவில்லை என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றைவௌியிட்டுள்ளது. கையடக்க தொலைபேசிகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து குறுஞ்செய்தி (SMS) வந்திருந்தால் மட்டுமே இன்று (16) முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய மின்சக்தி அமைப்புகளை துண்டிக்குமாறு அதன்உரிமையாளர்களிடம் இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த சில சவால் மிகுந்த நாட்களில் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் இலங்கை மின்சார சபைமேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 15ஆம் திகதி வரை 1387 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த ஒரு வன்முறை சம்பவம்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

 அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 1214 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 173 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஸ்ரீ தலதா மாளிகையில் கண்காட்சி நடைபெறுவதால் கண்டிப் பகுதியைச் சுற்றியுள்ள 32 பாடசாலைகள் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மூடப்படும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார். தலதா மாளிகையில் கண்காட்சி நடைபெறுவதால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் படையினருக்கானதங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படுவதால் இவ்வாறு மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.