தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர்களுக்கும் தலைமைகளுக்கும் இடையிலான யாழ் மாவட்ட சந்திப்பு!
,

தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர்களுக்கும் தலைமைகளுக்கும் இடையிலான யாழ் மாவட்ட சந்திப்பு நேற்று (11) யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கிறிஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தமிழ் தேசிய பேரவையின் தேர்தல் கால சவால்கள், எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன் பொழுது தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம் , பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், ஜனநாயக தமிழரசு கட்சியின் உப செயலாளர் நாவலன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வெற்றி பெற்ற உறுப்பினர்கள், அரசியல் இயக்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.