Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

காரைதீவில் ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குழு!

கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபர் கைது!

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள்   கடத்தல் குழு காரைதீவில் மாட்டியது. கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபர் கைது! 
நீண்ட காலமாக  சூட்சுமமாக  கடல் மற்றும் தரை வழியாக  ஐஸ் மற்றும் ஹெரோயின்  போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (09 )இரவு அம்பாறை மாவட்டம் காரைதீவு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில்  இடம்பெற்ற  சோதனை நடவடிக்கையின் போது குறித்த இரண்டு   சந்தேக நபர்களையும்   அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  கே.ஏ.எம்.பிரியங்கர  தலைமையிலான குழுவினரால்   கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் கைதான சந்தேக நபர்களில்  கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபரிடம்   இருந்து   50 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மற்றுமொரு சந்தேக நபரிடம் இருந்து 20 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் 250 மில்லி கிராம்  ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டது. குறித்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள் 80 ஆயிரம் ரூபா பணம் இலத்திரனியல் தராசு நவீன கைத்தொலைபேசிகள் என்பன சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளன. 

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும்    D.C.D.B என அழைக்கப்படும்   அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு பிரிவு    உப பொலிஸ் பரிசோதகர்  கே.ஏ.எம்.பிரியங்கரவிற்கு     கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஐஸ்  ஹெரோயின் போதைப்பொருட்கள்  கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது 40 மற்றும் 31  வயது மதிக்கத்தக்க குறித்த இரு சந்தேநபர்களில் ஒருவர் தலைமுடி வெட்டும் தொழில் செய்பவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.இச்சந்தேதக நபர்கள் புத்தளம், மன்னார் மாவட்டங்களில் இருந்து தரை மற்றும் கடல் வழியாக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் என விசாரணை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

மேலும் குறித்த சந்தேக நபர்கள் காரைதீவு பகுதியில் வாடகை அடிப்படையில் வீடு ஒன்றினை பெற்று இக்கடத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை  மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்  கைதான இரு சந்தேக நபர்களும் முரணான வாக்குமூலங்களை ஏற்கனவே  பொலிஸாருக்கு வழங்கி விசாரணைகளை திசை திருப்ப முயன்றுள்ளதாக     எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

அத்துடன் கைதான சந்தேக நபர்கள் மற்றும் சான்றுப்பொருட்கள் யாவும் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்  1 சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில்  அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  கே.ஏ.எம்.பிரியங்கர  தலைமையிலான குழுவினரால்   இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.